சிங்கப்பூரில் இவ்ளோ GST வரியும் வெளிநாட்டினரும் சுற்றுலாப் பயணிகளும் செலுத்தியதா! – நாடாளுமன்றத்தில் அமைச்சர் சீ ஹாங் விளக்கம்

Singapore GST 8
Singapore GST 8
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து GST வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டினரும் கிட்டத்தட்ட $3 பில்லியன் GST வரியைச் செலுத்தியுள்ளனர்.
இது அந்த ஆண்டுகளில் தனிப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் செலுத்திய வரியில் பாதியாகும்.நாடாளுமன்றத்தில் நிதி மூத்தத் துணை அமைச்சர் சீ ஹாங் டாட் இதனைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்களின் குடும்பங்களுக்கு வருடந்தோறும் கொடுக்கப்படும் $1 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள GST பற்றுச் சீட்டுகளையும் கழித்துவிட்டு கணக்கிடும் போது,குடும்பங்கள்,தனிநபர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட GST வரி சுமார் $5.7 பில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

குடும்பங்களும் தனிநபர்களும் 80 சதவீத வரியைச் செலுத்துகின்ற நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினரும் சுற்றுலாப்பயணிகளும் 50 சதவீதத்திற்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக திரு.சீ குறிப்பிட்டார்.எனவே,சிங்கப்பூர் அரசாங்கம் வசூலிக்கும் GST வரியில் பெரும்பகுதி இரண்டு பிரிவினரிடம் இருந்து வருகிறது.