சிங்கப்பூரில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு இனி அதிக கட்டணம்!

automated-immigration-lanes for foreigners pr
Joshua Lee

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து மீண்டு வருகிறது.

இந்நிலையில், சாங்கி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு வரும் நவம்பர் 1 முதல் விமான நிலையக் கட்டணங்கள் மற்றும் வரிகளில் உயர்கின்றன.

சிங்கப்பூரில் தமிழ் பணிப்பெண், ஊழியருடம் முதலாளி வீட்டில் உல்லாசம் – உடைந்துபோன முதலாளி.. “வீட்டில் ஒருவராக அனைத்தும் செய்தேன்” என வேதனை

அதாவது அவர்கள் தற்போதுள்ள கட்டணத்தில் இருந்து அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் தற்போது S$52.30 கட்டணம் செலுத்து வருகின்றனர். இது பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணமாக S$35.40 (PSSF), S$6.10 விமானப் போக்குவரத்து வரி மற்றும் S$10.80 விமான நிலைய மேம்பாட்டிற்கான வரி ஆகியவற்றை உள்ளடக்கியது.

இனி வரும் நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை, மொத்த கட்டணம் S$59.20 ஆக உயரும் என கூறப்பட்டுள்ளது. இதில் பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணம் S$40.40 ஆகவும், விமானப் போக்குவரத்து வரி S$8 ஆகவும் உயருகிறது.

பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணம் மீண்டும் ஏப். 1, 2023 மற்றும் ஏப். 1, 2024 முதல் கட்டங்களாக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

பிழைக்க வந்த இடத்தில் வீண் வேலை – இந்தியருக்கு சிறை தண்டனை