சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த தம்பதிக்கு கொரோனா உறுதி!

NParks investigating alleged smuggling singapore to tamilnadu
Photo: Coimbatore Airport Official Twitter Page

ஓமிக்ரான் பிஎஃப்.7 வகை கொரோனா பாதிப்பு சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்துள்ள நிலையில், நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“Work permit வேலை கிடைத்தும் சிங்கப்பூர் வர முடியல” – காரணம் இது தான் ஊழியர்களே!

அந்த வகையில், கடந்த வாரம் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை சர்வதேச விமான நிலையம் வந்த தம்பதிக்கு ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை (RT-PCR) மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அந்த தம்பதி விமான நிலையத்தில் இருந்து கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள இல்லத்திற்கு காரில் சென்றனர். இந்த நிலையில், ஜனவரி 9- ஆம் தேதி அன்று பரிசோதனை முடிவு வெளியான நிலையில், அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தம்பதிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், அவர்களுக்கு நோய்த்தொற்றுக்கான எந்தவித அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் கூறினர். அத்துடன், எந்த வகையான கொரோனா என்பது குறித்து கண்டறிய சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அவர்களது மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் 42 தேசிய சேவையாளர்கள் பணியின்போது இறப்பு

அதேபோல், ஷார்ஜாவில் இருந்து கோவை திரும்பிய 27 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் பீலமேட்டில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.