பயணிகளின் கவனத்திற்கு- பேருந்து சேவை தொடர்பாக எஸ்.பி.எஸ். நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

Photo: SBS Bus Wikipedia

 

சிங்கப்பூரில் உள்ள நோவெனா சதுக்கம் முன்னால் (Front Of Novena Square) பாதசாரி உயர்நிலை பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதால் பாலெஸ்டிர் சாலை (Balestier Road), மௌல்மெய்ன் சாலை (Moulmein Road), தாம்சன் சாலை (Thomson Road) ஆகிய சாலைகள் மூடப்படுகிறது. இதனால் வரும் ஜூன் 27- ஆம் தேதி அன்று அதிகாலை 12.00 AM மணி முதல் 05.30 AM மணி வரை 21, 124, 851 ஆகிய எண் கொண்ட பேருந்து சேவையில் தற்காலிகமாக சில பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும் என எஸ்.பி.எஸ். பொது போக்குவரத்து நிறுவனம் (SBS Transit Ltd) அறிவித்துள்ளது.

 

அதன்படி, பாலெஸ்டிர் சாலையில் 21 எண் கொண்ட பேருந்து சேவையில் After Irrawaddy Road (பேருந்து நிறுத்தக் குறியீடு 50169), Opposite Zhongshan Mall (50179), Opposite Public Mansion (பேருந்து நிறுத்தக் குறியீடு 50189), Opposite Shaw Plaza (பேருந்து நிறுத்தக் குறியீடு 50199), After Pegu Road (பேருந்து நிறுத்தக் குறியீடு 50209) ஆகிய பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும். அதேபோல், இந்த சாலையில் 124 எண் கொண்ட பேருந்து Opposite Blk 104 (பேருந்து நிறுத்தக் குறியீடு 50229) என்ற பேருந்து நிறுத்தத்தைத் தவிர்க்கும்.

 

மௌல்மெய்ன் சாலையில் 21, 124 எண் கொண்ட பேருந்துகள் Revival Centre Church (பேருந்து நிறுத்தக் குறியீடு 50111), National Skin Centre (பேருந்து நிறுத்தக் குறியீடு 50121) ஆகிய பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும். தாம்சன் சாலையில் 21, 851 எண் கொண்ட பேருந்துகள் Novena Station (பேருந்து நிறுத்தக் குறியீடு 50038), Opposite Novena Lodge (பேருந்து நிறுத்தக் குறியீடு 50049), Opposite Thomson Medical Centre (பேருந்து நிறுத்தக் குறியீடு 50059) ஆகிய பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும். இந்த நடைமுறை ஜூன் 27- ஆம் தேதி அன்று அதிகாலை 12.00 AM மணி முதல் 05.30 AM மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, பயணிகள் இந்த பேருந்து நிறுத்த விவரங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.