பாஸ்போர்ட் இல்லை.. வெளிநாட்டவர் சிங்கப்பூரில் கைது

பாஸ்போர்ட் இல்லை.. வெளிநாட்டவர் சிங்கப்பூரில் கைது
ICA/Facebook

சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற இந்தோனேசிய ஆடவர் ஒருவர் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

துவாஸ் சோதனை சாவடி வழியே நடந்தே நுழைய முயன்றபோது, கடந்த மார்ச் 23ஆம் தேதி நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியரின் உதவி.. ஊழியர்களின் Work permit தொடர பலே திட்டம் – MOM செய்த அதிரடி

சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளது.

அதாவது, “அந்த ஆடவர் சிங்கப்பூர் நோக்கி துவாஸ் இரண்டாவது இணைப்பில் நடந்து செல்வதைக் துவாஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் கண்டனர்.”

இதனால் போக்குவரத்து பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் அவர் உடனடியாக மறிக்கப்பட்டார்.

பின்னர், அதிகாரிகள் அவரை சோதனை செய்யதபோது, ​​​​அவரிடம் எந்த ID அல்லது பயண ஆவணங்களும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.