எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வு: பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் அதிக நேரம் எடுக்கும் – ICA

ICA

சிங்கப்பூரில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் அதிக நேரம் எடுக்கும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (மார்ச் 29) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், விண்ணப்ப தேவை அதிகரித்து வருவது அதற்கு காரணம் என்று ICA குறிப்பிட்டுள்ளது.

ஆகா செம்ம!! சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் தமிழ்நாட்டின் ஆவின் பால் – வலைத்தளங்களில் கலக்கும் வைரல் வீடியோ!

இந்த மார்ச் மாதம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் எண்ணிக்கை முன்னெப்பொழுதும் இல்லாத அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது என்று ICA கூறியது என CNA தெரிவித்துள்ளது.

“தற்போது, ​​தினசரி பெறப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கோவிட்-19க்கு முந்தைய தினசரி சராசரியை விட மூன்று மடங்காக உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

அதாவது ஒரு நாளுக்கு சுமார் 6,000 விண்ணப்பங்கள் பெறப்படுவதாக ICA செய்தித் தொடர்பாளர் கூறினார். அதற்கு முன்னர் இது 2000 என இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி மலேசியரின் அனைத்து மேல்முறையீடும் தள்ளுபடி: சிங்கப்பூரில் தூக்கு உறுதி – கலங்கி நிற்கும் குடும்பம்!