பீஷானில் காக்கா கூட்டம் தாக்கியதில் 10 பேர் காயம்

pathway-bishan temporarily closed
Shin Min Daily News

பீஷானில் காக்கா கூட்டம் தாக்கியதில் 10 பேர் காயமடைந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நடைபாதை ஒன்று தாற்காலிகமாக மூடப்பட்டதாகவும், அதாவது சுமார் ஒரு மணி நேரம் மூடப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இனி குழந்தை பிறந்தால் S$11,000 போனஸ் – 3 அல்லது அதற்கு மேல் S$13,000 போனஸ்

இந்த சம்பவம் பீஷான் ஸ்ட்ரீட் 12இல் அமைந்துள்ள பிளாக் 110க்கு அருகே நடந்ததாக CNA கூறியுள்ளது.

அங்கு காகம் ஒன்று காயமுற்று பறந்துசெல்ல முடியாமல் கீழே கிடந்ததாகவும் அது தெரிவித்தது.

இதனை அடுத்து காயம் அடைந்த அந்த காகம் தேசியப் பூங்கா வாரியத்தால் கூண்டில் அடைக்கப்பட்டது.

வெடித்து தீப்பற்றி எரிந்த லாரி – விரைந்து வந்த SCDF… என்னதான் நடந்தது?