கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள்…அதிர்ந்துப் போன அதிகாரிகள்!

Photo: Chennai Customs Official Twitter Page

வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்களை விமான நிலையத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீ சிவன் கோயிலில் மார்கழி மாத பூஜை நேரங்கள் அறிவிப்பு!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு (Chennai International Airport) வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சென்னை மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் (Chennai Customs Officers) அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, ஒரு பையில் எட்டு பறக்கும் அணில், மூன்று குரங்குகள், மூன்று பல்லிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வனவிலங்குகள் நல சட்டம் 1972, CA 1962 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிடிபட்ட அரியவகை உயிரினங்களை மீண்டும் பாங்காக்கிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ளனர்.

மேலிருந்து தரையில் விழுந்து சிதறிய பீர் பாட்டில்கள்! – யாரு பாத்த வேலை இது?; சிசிடிவியில் சிக்கிய நபர்!

கடந்த சில நாட்களாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம், அரியவகை உயிரினங்கள் கடத்துவது அதிகரித்து வருவதால், சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.