நொறுங்கிய முட்டைகள் – துப்புரவில் வழிபோக்கர்கள்

paya lebar road lorry eggs smashed passerby cleans the road singapore

பாயா லெபரில் லாரி மோதிய விபத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகள் சாலையில் விழுந்து உடைந்தன

கெய்லாங் சாலையில் இருந்து பாயா லெபார் சாலைக்கு முட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று வலப்புறமாக திரும்பிய போது, பக்கவாட்டு கதவு சரியாகப் பூட்டப்படாமல் இருந்ததால், திருப்பத்தின் போது முட்டை தட்டுகள் கவிழ்ந்து சாலையில் விழுந்தன

ஓட்டுநர் தனது பொருட்கள் கீழே விழுவது கூட தெரியாமல், வாகனத்தை ஓட்டினார். முட்டைகள் பெரும்பாலும் சாலையின் இரண்டாவது பாதையில் விழுந்ததால், வலதுபுறம் திரும்பும் பெரும்பாலான வாகனங்கள் தரையில் உள்ள குழப்பத்தைத் தவிர்க்க முயன்றன.

முட்டைகளை அகற்ற டிஎம்சி அகாடமி ஊழியர்கள் ஐந்து பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மூன்று பேரும் உதவினர்.

உடைந்த முட்டைகள் மீட்கப்பட்டு குப்பை பைகளில் வைக்கப்பட்டு, உடைக்கப்படாத முட்டைகள் சேகரிக்கப்பட்டு மீண்டும் முட்டை தட்டுகளிலும் வைக்கப்பட்டன.

நிறைய முட்டைகள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த 20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு, லாரி டிரைவர் சம்பவ இடத்துக்குத் திரும்பினார். பின்னர் உடைந்த மற்றும் உடைக்காத முட்டைகளை சேகரித்து கொண்டு சென்றார்.