டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்த சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் – எதற்காக இந்த அறிமுக அழைப்பு?

PC :Simon Wong Delhi CM Aravind Kejriwal

சிங்கப்பூரின் உயர் ஆணையர் சைமன் ஓங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அறிமுக அழைப்பை மேற்கொண்டார்.இந்தியாவிற்கு வந்த சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமனை புதன்கிழமை அன்று (June 1) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். நகர்புற மேலாண்மை, கழிவு மேலாண்மை, ,பொது வீடுகள் மற்றும் நீர் போன்ற சிக்கல்கள் குறித்து டெல்லி முதல்வரிடம் சைமன் விவாதித்தார்.

சிங்கப்பூர் மற்றும் டெல்லி போன்ற அனைத்து நகர்ப்புற மையங்களிலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் பொது வீடுகள்,கழிவு மேலாண்மை மற்றும் நகர்ப்புற மேலாண்மை போன்றவை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் மற்றும் டெல்லி இடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்பு குறித்து சைமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களது விவாதம் எது தொடர்பானது என்பதையும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சிங்கப்பூர் துணை உயர் ஆணையருக்கு விருந்து அளித்ததற்காக பாஜக மக்களவை உறுப்பினரான மீனா லேகிக்கு நன்றி தெரிவித்தார்.

சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமனின் ட்வீட்டை டெல்லி முதல்வர் ரீட்வீட் செய்தார். உலக நகரங்களின் உச்சி மாநாட்டிற்கு அழைப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நன்றி என்று ரீட்வீட்டில் தெரிவித்திருந்தார்.பொது நலனில் வேகமான வளர்ச்சியை சிங்கப்பூரும் டெல்லியும் நிச்சயமாக ஒருங்கிணைந்து செயல்படும் என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்