பாதசாரிக்கு மரணத்தை ஏற்படுத்திய ஆடவருக்கு 12 நாட்கள் சிறை

Cyclist jailed 12 days for fatally crashing into 73-year-old man at Hougang pedestrian crossing
Google Maps

Singapore: சாலை சந்திப்பில் கடக்கவிருந்த பாதசாரி மீது மோதி மரணத்தை ஏற்படுத்திய 46 வயதான ஆடவருக்கு 12 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வூன் ஹொக் சூன் என்ற அவர் கவன குறைவாக இந்த விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இளம்பெண் ஒருவரை கடுமையாக தாக்கிய மூன்று டீன்ஏஜ் பெண்கள் கைது – வீடியோ வைரலானதால் அதிரடி

73 வயதான பாதிக்கப்பட்ட ஆடவருக்கு தலையில் கடும் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சாங்கி பொது மருத்துவமனையில் இறந்தார்.

வூன், ஹெல்மெட் அணியவில்லை என்ற மற்றொரு குற்றச்சாட்டும் தண்டனையின் போது கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விபத்து ஹவ்காங் அவென்யூ 3ல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி காலை 7 மணிக்கு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலையில் செல்லும் ஆண்களிடம் விலை பேசும் பெண்கள்… தகாத உறவுக்கு அழைப்பு – சிக்கிய 6 பேர்