கிழக்கு கடற்கரை வளாகத்தை விட்டு வெளியேறும் பிரபல உணவகம் : புதிய கிளை எங்கே ?

penny university

பென்னி யுனிவர்சிட்டி உணவகம்,  10 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் கிழக்கு கடற்கரை வளாகத்தை விட்டு வெளியேறுகிறது. பிரபலமான இவ்வுணவகத்தின் கடைசி நாள் அக்டோபர் 9, 2022 என அதன் நிறுவனர் மவுஸ் கமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பெரிய இடத்திற்கான தேவை மற்றும் வாடகை காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.

இருப்பினும், இங்குள்ள உணவக முன்னோடிகளில் ஒன்றான பென்னி யுனிவர்சிட்டி என்னும் இந்த ஸ்தாபனத்தின் உணவை நீங்கள் முயற்சிப்பது இதுவே கடைசி முறையாக இருக்காது. ஏனென்றால் புகிஸில் உள்ள 17 ஜாலான் கிளாப்பாவிற்கு உணவகம்  நகருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது பிரியாவிடை அல்ல என்றும் , இது தங்கள் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்றும் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறும், 17 ஜாலான் கிளாப்பாவில் உள்ள தங்கள் புதிய உணவகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அதன் இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.