சிங்கப்பூரில் முதலைக்கறி சுவைக்க ஆசையா? வாங்க அப்படியே ருசித்து சாப்பிடலாம் – நண்பர்கள் சொன்ன கடை!

கேட்ட உடனே திகிலா இருக்குல? நமக்கு தான் இது புதுசு. சிங்கப்பூரில் இது சர்வ சாதாரணம். சிங்கப்பூரில் உங்களுக்கு முதலைக்கறி சுவைக்க ஆசை வந்தால் கவலையை விடுங்கள்.

இரு உணவகங்கள் உள்ளூரில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்ற  முயற்சியில் முதலைக்கறி வழங்கத் தொடங்கியுள்ளன.

People Table Tales, Maison Shuko ஆகிய இரு உணவகங்களில் முதலைக்கறி கிடைக்கிறது.

இரு உணவகங்களுமே சிங்ப்பூரின் கிராஞ்சியில் உள்ள லொங் குவாங் முதலைப்பண்ணையிலிருந்து முதலை மாமிசத்தைப் பெறுகின்றன.

அங்கு முதலைகள் அவற்றின் தோலுக்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன. ஒரு சில சீன உணவகங்கள் மட்டுமே முதலை மாமிசம் பயன்படுத்துகின்றன.

People Table Tales உணவகத்தில் முதலை மாமிசம் ரெண்டாங் பாணியில் கிடைக்கிறது, வால் பகுதி அப்பளம் போன்ற உணவாக கிடைக்கிறது.

இரு உணவகங்களிலும் முதலைக்கறியுடன் உள்ளூரில் உற்பத்தியாகும் மீன், தவளை, காய்கறிகள், காளான்களும் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.