சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலை சரிவு – முழு ரிப்போர்ட்

Pic: The Star

சிங்கப்பூரில் பெட்ரோல் நிலைய விற்பனை விலை தொடர்ந்து சரிந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

அதாவது நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 22) லிட்டருக்கு ஏழு காசுகள் வரை குறைந்தது.

சிங்கப்பூர் முதலாளி கொடுத்த சம்பள பாக்கி ரூ.3 லட்சம்… போதையில் தொலைத்த ஊழியர் – போலீசில் ஒப்படைத்த பழம் விற்கும் பாட்டி: குவியும் பாராட்டு

சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்தால் அமைக்கப்பட்ட பம்ப் விலை கண்காணிப்பாளரான Fuel Kaki இதுபற்றிய தகவலை கூறியுள்ளது.

டீசலின் விலை தற்போது $2.91 (Sinopec, SPC) முதல் $2.93 (Caltex, Shell) வரை விற்பனை ஆகிறது.

சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவை அனைத்தும் லிட்டருக்கு $3க்கு மேல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலைப் பொறுத்தவரை, 92-ஆக்டேன் தரம் பெட்ரோல் லிட்டருக்கு $2.89 விற்பனை ஆகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, இது $3.30 ஆக இருந்தது.

பிரபலமான 95-ஆக்டேன் ஒரு லிட்டர் $2.94 க்கு விற்பனை ஆகிறது. அதே போல 98-ஆக்டேன் பெட்ரோல் $3.14 முதல் விற்பனை ஆகிறது.

24 பயணிகளுடன் வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து… 19 பேர் மருத்துவமனையில் அனுமதி