வெளிநாட்டு ஊழியரின் புன்னகைக்கு காரணமான புகைப்படம் – (காணொளி)

Photographer capture migrant worker
Pics: muhd rifqi solihin

முகமது ரிஃப்கி (Muhamed Rifqi) என்ற நிபுணத்துவ நிழற்படம் எடுப்பவர், ஆற்றுப் பகுதிக்கு அருகே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தம்மைப் புகைப்படம் எடுக்க உதவ முடியுமா என முகமது ரிஃப்கிடம் கேட்டார்.

பின்னர், முகமது ரிஃப்கி அவரிடமிருந்த நிபுணத்துவ கேமராவைக் கொண்டு அந்த வெளிநாட்டு ஊழியரை அழகாக படம் பிடித்தார்.

COVID-19 தொற்றுநோய் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

வெளிநாட்டு ஊழியரை படம் பிடித்த ரிஃப்கி, அதனை தம் TikTok செயலில் பகிர்ந்தார். அந்தப் படங்களைப் பார்த்ததும், வெளிநாட்டு ஊழியர் முகத்தில் மலர்ந்த புன்னகை தமக்கு பெருமளவு மனநிறைவு அளித்ததாக ரிஃப்கி குறிப்பிட்டார்.

காணொளி, https://www.tiktok.com/@mdrifqisol

வெளிநாட்டு ஊழியரை சிறப்பாக எடுத்த அந்த படங்களை, அந்த ஊழியருக்கு அனுப்பி வைத்ததாகவும் முகமது ரிஃப்கி கூறினார்.

ஊழியரை படம்பிடித்த அனுபவம் குறித்த முகமது ரிஃப்கியின் TikTok காணொளி சுமார் 1,36,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு 23,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ரிஃப்கியின் செயலைப் பாராட்டி பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘OCBC’ வங்கியின் வருவாய் தொடர்ந்து உயர்வு!