வெளிநாட்டவர்களால் சீரழிக்கப்பட்ட பெண்… ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர்.. இருவர் இடையே நடந்த உரையாடல் – முழு தொகுப்பு

pioneer-victim-discovery
Shin Min Daily News and by Riad Mahmud Rocky from Google Maps

பயனியர் சாலையில் இரு பங்களாதேஷ் நாட்டவரால் நாசம் செய்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 32 வயதுப் பெண், ஐந்து மணிநேரங்களுக்குப் பிறகு அந்த பக்கம் சென்ற வழிப்போக்கரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

பங்களாதேஷ் நாட்டவரான அவர்கள் 30 வயதான அகமது ரெய்ஹான் மற்றும் 36 வயதான ஆலம் ஃபோய்சல் என்றும் கூறப்பட்டுள்ளது.

விடுதியில் வசிக்கும் 30,000 ஊழியர்கள் வரை… 8 மணி நேரம்… சமூக பொது இடங்களுக்கு செல்ல அனுமதி

அதே நாளில் காலை 7.25 மணியளவில் உதவி வேண்டி இதுபற்றி போலீசிடம் வழிப்போக்கர் கூறியதாக காவல்துறை அறிக்கையில் கூறியுள்ளது.

ஐந்து மணிநேரம் கடந்தது

இதற்கு இடையில், குற்றம் நடந்த நேரத்திற்கும் போலீசாருக்கு தகவல் அளித்த நேரத்துக்கும் இடையே சுமார் ஐந்து மணிநேரம் கடந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏனெனில், குற்றம் நடந்த இடத்தின் தொலைவு மற்றும் சம்பவம் நடந்த நேரம் ஆகியவை அதற்கு காரணமாக இருக்கலாம்.

புலம்பெயர்ந்த ஊழியரின் உதவி

சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் இதுபற்றி கூறுகையில், சதாம் என்ற வழிப்போக்கர் பாலத்தின் கீழே அந்த பெண் தரையில் கிடப்பதைக் கண்டார்.

சதாம் என்பவர் 31 வயதான புலம்பெயர்ந்த ஊழியர் ஆவார், அந்த நேரத்தில் அவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை, கால்கள் மற்றும் அவர் கிடந்த இடத்தை சுற்றியுள்ள நிலம் ஆகியவையில் இரத்த கறை படிந்து இருந்ததாக அவர் கூறினார்.

சதாமிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்

மயக்கம் போன்ற நிலையில் இருந்த அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று சதாம் கேட்டுள்ளார்.

அதற்கு பெண், “எனக்குத் தெரியாது” என்று திரும்பத் திரும்ப பதிலளித்தார் என்றும், ஆனால் சதாமிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு புலம்பெயர்ந்த ஊழியரின் உதவி

சம்பவம் நடந்த இடத்தைக் கடந்த மற்றொரு சீன புலம்பெயர்ந்த ஊழியர் தனது உதவியை வழங்க முயன்றதாக சதாம் கூறினார்.

அப்போது, அந்த பெண் தனது காலில் எழுந்திருக்க போராடியதாகவும், ஆனால் அவரால் முடியவில்லை என மீண்டும் அமர்ந்தார் எனவும் கூறியுள்ளார் அவர்.

பின்னர், சீன ஊழியர் பாதிக்கப்பட்டவரின் பலவீனமான நிலையைக் அறிந்து, அவர் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்தார்.

இந்த சம்பவம் அந்த வழியாகச் சென்ற வேறு சில புலம்பெயர்ந்த ஊழியர்களின் கவனத்தையும் ஈர்த்ததாக ஷின் மின் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் மற்றவர்களிடம் உதவி கேட்க MRT நிலையத்திற்கு விரைந்துள்ளனர்.

பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது – நீதிமன்றத்தில் ஆஜர்

பணிக்கு விரைந்து சென்றுகொண்டிருந்த சதாம் பாதிக்கப்பட்டவர் தாகம் அடங்க பானம் வாங்கி கொடுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

ஆம்புலன்ஸ்காக காத்திருந்த அந்த நேரத்துக்குள், பாதிக்கப்பட்டவரைப் பார்ப்பதற்கும், உதவி செய்யவும் அதிகமான மக்கள் கூடியதாகவும் சதாம் கூறினார்.

அதன் பின்னர், ஐந்து நிமிடம் கழித்து போலீசார் வந்தனர், அதை தொடர்ந்து பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவீர விசாரணைகள் மூலமாகவும், போலீஸ் கேமராக்கள் உதவியுடனும், புகார் பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அந்த சந்தேக நபர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இரு ஆண்களும் அந்த பெண்ணை முன்னர் அறியாதவர்கள் என தெரியவந்துள்ளது.

இருவர் மீதும் கடந்த மார்ச் 10ம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கு ஒத்திவைப்பு

இரண்டு ஆடவர்களும் மத்திய போலீஸ் பிரிவு சிறையில் அடைக்கப்படுவார்கள் என வியாழன் அன்று கூறப்பட்டது.

மேலும், அவர்களின் வழக்குகள் மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீரழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்!