பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து சாலை அமைத்துள்ள சிங்கப்பூர்… இந்த ஐடியா நல்லாருக்கே…

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) சமீபத்தில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் (NUS) இணைந்து, பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளது. சிங்கப்பூரின் உள்ளூர் கழிவு நீரோடையிலிருந்து பிளாஸ்டிக்கை ஒருங்கிணைத்து புதிய சாலை கலவை உருவாக்கப்பட்டுள்ளதாக பிப்ரவரி 10 அன்று LTA பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இதுபோல பிளாஸ்டிக் கழிவுகளால் இரண்டு வகையான சாலைக் கலவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, இரண்டு வகையான சாலை கலவையை மூன்று வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தி அவற்றை ஆணையம் சோதனை செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. ஜலான் புரோவில் ஒரு சோதனை தற்போது நடத்தப்பட்டுள்ளது.

மெதுவாக நகரும் கனரக வாகனங்கள் பயன்படுத்தும் சாலைகளுக்கு இந்த பொருள் மிகவும் பொருத்தமானது என்று LTA தெரிவித்துள்ளது. இதற்கிடையில், NUS உடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய பிட்மினஸ்-பிளாஸ்டிக் கலவையானது மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் சோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சோதனைகளில் வெற்றியடைந்தால், இந்த புதிய சாலை கலவைகள் அதன் தற்போதைய சாலை கலவைகளை விட சிறப்பாக செயல்படும் என்று ஆணையம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. அத்துடன், குறைந்த டயர் சத்தத்தை மட்டுமே வழங்கும் என்று தெரிவித்துள்ளது.