சிங்கப்பூரின் கோவிட்-19 நிலைமை, அடுத்த கட்டங்கள் என்ன? – நாட்டு மக்களுக்கு பிரதமர் லீ உரை!

Pm lee leave speech
Pic: MCI/Fyrol

சிங்கப்பூரின் கோவிட்-19 நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் இன்று (மார்ச் 24) காலை 11 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

ஓமிக்ரான் அலை குறைந்து வருவதாகவும், இதனால் கோவிட்-19 நிலைமை மேம்பட்டு வருகிறது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் கடை புகுந்து திருட்டு… பொருளாதார பிரச்சனையால் எடுத்த விபரீதம் முடிவு – சிறையில் அடைப்பு

மேலும், சிங்கப்பூரர்கள் படிப்படியாக வைரஸுடன் வாழ கற்றுக்கொண்டு வருவதாகவும் அவர் நேற்று புதன்கிழமை பேஸ்புக் பதிவில் கூறினார்.

சிங்கப்பூரின் நிலைமை மற்றும் எடுத்துவைக்க உள்ள அடுத்த கட்டங்கள் குறித்து காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பில் பேசவுள்ளதாக திரு லீ பதிவில் குறிப்பிட்டார்.

அதை நீங்கள் அவரின் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம் அல்லது மீடியாகார்ப் சேனல்களில் பார்க்கலாம்.

அதாவது, சிஎன்ஏ, யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக்கில் இந்த உரையை நேரலையில் நீங்கள் பார்க்கலாம்.

தமிழில் விளக்கம் அறிய தமிழ் மைக்செட் பக்கத்துடன் இணைந்து இருங்கள்.

புதர்களுக்குள் கிடந்த சடலம்…துப்புரவு ஊழியர் கொடுத்த புகார் – விசாரணை நடத்தி வரும் போலீஸ்!