130- வது ஆண்டை நிறைவு செய்த ஷெல் நிறுவனத்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து!

சிங்கப்பூரில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று ஷெல் நிறுவனம் (Shell). இந்நிறுவனம் சிங்கப்பூர் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. சிங்கப்பூரில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ள ஷெல் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் பங்க்குகளை நிறுவியுள்ளது. சிங்கப்பூரில் இந்நிறுவனத்தில் மட்டும் 3,100- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் ஷெல் நிறுவனம், கடந்த 1891 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொழிற்சாலைத் தொடங்கி, தற்போது 130- வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.130- வது நிறைவு விழாவையொட்டி ஷெல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அந்நிறுவனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சிங்கப்பூரில் 130- வது ஆண்டை நிறைவு செய்த ஷெல்லுக்கு வாழ்த்துகள்! ஷெல் சிங்கப்பூரின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அவர்களின் பொருளாதார பங்களிப்புகளுக்கு அப்பால், அவர்கள் ஒரு செயலில் சமூகப் பாத்திரத்தை வகித்துள்ளனர், மேலும் ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பங்காளியாக உள்ளனர்.

பல்வேறு பகுதிகளிலும் பல சிங்கப்பூரர்கள் ஷெல்லை வழிநடத்துவதைக் கண்டு மகிழ்ச்சி. எதிர்காலம் சவால்களைக் கொண்டுள்ளது, காலநிலை மாற்றம் மிகப்பெரிய மற்றும் மிக அவசரமான ஒன்றாகும். சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 (Singapore Green Plan 2030) மூலம் சிங்கப்பூர் தனது சொந்தப் பங்கைச் செய்து வருகிறது. இந்தக் கடினமான மாற்றங்களைச் செய்வதால், வணிகங்கள் உட்பட அனைவரிடமும் உங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறோம். அடுத்த தசாப்தங்கள் சிங்கப்பூரில் ஷெல்லின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்களைக் குறிக்கும்.

“மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும்”- இந்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்!

இந்த மாற்றத்தை நாங்கள் ஒன்றாக வழிநடத்துவோம், காலநிலை மாற்றத்திற்கு பதிலளிக்கும் வகையில் எங்கள் நீண்டகால கூட்டாண்மையை மாற்றியமைப்போம், மேலும் நிலையான மற்றும் குறைந்த கார்பன், உலகில் தொடர்ந்து ஒன்றாக செழிப்போம் என்று நான் நம்புகிறேன் என்று ஷெல்லிடம் கூறினேன்.” இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.