அமெரிக்காவுக்கு செல்கிறார் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

 

நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (ஜன.24) அமெரிக்காவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்.

வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று (ஜன.24) அமெரிக்காவுக்கு செல்கிறார். பிரதமர் லீ சியன் லூங் உடன் திருமதி லீயும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் செல்கின்றனர்.

“மன நிம்மதியும், மகிழ்ச்சியுடன் இருப்பது சிங்கப்பூரில் வாழக் கூடிய தமிழர்கள்; சிங்கப்பூர் தான் நம்பர் 1”- மதுரை முத்து வெளியிட்டுள்ள காணொளி!

அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் செல்லவுள்ளார். பிரதமர் நாட்டில் இல்லாத போது, ஜனவரி 24- ஆம் தேதி முதல் ஜனவரி 27- ஆம் தேதி வரை சிங்கப்பூரின் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், தற்காலிகப் பிரதமராக செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.