நீண்டகால நட்பு நீடிக்குமா? – சிங்கப்பூர், ஜப்பான் இடையேயான உறவு குறித்து விவாதம் செய்த பிரதமர்கள்

PM Lee Japan PM Fumio

கோவிட் தொற்றுக்கு பிந்தைய காலத்தில் ஜப்பானுடன் நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்பு கடந்த 55 ஆண்டுகளாக வளர்ந்துள்ளதாகவும், இது மேலும் வளர சாத்தியங்கள் அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், தேசத்தை வளர்ப்பதற்கும் அவர்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்று திரு லீ கூறினார்.

“சிங்கப்பூரும் ஜப்பானும் நீண்டகால நட்புகொண்டு, பல துறைகளில் கணிசமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. தேசிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், திறந்த மற்றும் உள்ளடக்கிய பிராந்திய கட்டமைப்பை நிலைநிறுத்துவதற்கும் நாங்கள் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கிறோம்,” என்றும் திரு லீ கூறினார், இரு நாடுகளும் மிக சமீபத்தில் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு உட்பட பல பன்முக முயற்சிகளில் கைகோர்த்துள்ளன.

COVID-19 தொற்று இருந்த காலத்திலும், இருநாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து முன்னேறி இந்த ஆண்டு பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதை மேற்கோள் காட்டினார்.

அரசியல் மற்றும் பொருளாதார களங்களிலும், சைபர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி போன்றவற்றிலும் வலுவான ஒத்துழைப்பு இருப்பதை சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்தை மீண்டும் தொடரவும் மக்களிடையேயான உறவுகளை புதுப்பித்தலும் முன்னுரிமையாகும் என்றும் திரு லீ கூறினார்.