வெளிநாட்டு பயணங்களை முடித்தபின்னர் அமைச்சரவை மாற்றம் தொடங்கப்படும் – ஊடகங்களுக்கு பதிலளித்த பிரதமர் லீ

pm lee and lawrence wong

சிங்கப்பூர் பிரதமர் லீ எதிர்வரும் தொடக்கத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றங்கள் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் லீ ஊடகங்களிடம் பதிலளித்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற ASEAN-United States உச்சி மாநாட்டிற்கு பிறகு இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

ஜூன் மாதத் தொடக்கத்தில் அமைச்சரவை புதுப்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று நம்புகிறேன் என்று பிரதமர் லீ வெள்ளிக்கிழமை (MAY 13) ஊடகங்களிடம் தெரிவித்தார்.தற்போது வெளிநாட்டு பயணங்களில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் லீ தனது வெளிநாட்டு பயணங்களை முடித்தபிறகு அமைச்சரவை மாற்றங்கள் புதுப்பிக்கப்படும் என்று நம்புவதாக கூறினார்.

பிரதமர் தற்பொழுது மறுசீரமைப்பு பணிகளில் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.“அமைச்சரவை மாற்றத்தில் வேலை செய்து வருகிறேன் ஆனால் எனது வெளிநாட்டு பயணங்களை முடித்தவுடன் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

மே 26 மற்றும் 27ம் தேதிகளில் ஆசியாவின் எதிர்காலம் குறித்து இருபத்தி ஏழாவது சர்வதேச உச்சி மாநாட்டில் விவாதிப்பதற்காக டோக்கியோவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.பிரதமர் லீ மே 10 முதல் மே 14 ஆம் தேதி வரை ASEAN- US சிறப்பு உச்சி மாநாட்டிற்காக வாஷிங்டன் டிசியில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Lawrence Wong நிதி அமைச்சராகவும், Chan Chun Sing கல்வி அமைச்சராகவும் மற்றும் Ong Ye Kung சுகாதாரத்துறை அமைச்சராகவும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற மறுசீரமைப்பின் போது நியமிக்கப்பட்டனர்.