பிரதமரின் தேசிய தின பேரணி உரையில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

Photo: PM Office In Singapore

 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று (29/08/2021) நாட்டு மக்களுக்கு தேசிய தின பேரணி (National Day Rally Speech) உரையாற்றினார். 1 ஸ்டார்ஸ் அவென்யூவில் உள்ள மீடியா கார்ப் அலுவலகத்தில் (Mediacorp Campus at 1 Stars Avenue) நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று (30/08/2021) மாலை 06.45 PM முதல் 07.15 PM வரை மலாய் மொழியிலும், இரவு 08.00 PM மணி முதல் 09.15 PM மணி வரை ஆங்கிலம் மொழியிலும் தேசிய தின பேரணி உரையை பிரதமர் ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,000 பேர் காணொளி மூலம் பங்கேற்றனர்.

“அனைத்து குறைந்த ஊதிய ஊழியர்களும் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்”

பிரதமரின் தேசிய தின பேரணி உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்!

“சிங்கப்பூரில் வேலையிடப் பாகுபாட்டுக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சட்டங்கள் படி, ‘TAFEP’ எனும் நியாயமான வேலை நியமன நடைமுறைகள் குறித்த முத்தரப்புக் கூட்டணிக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். மேல்நிலை வேலை அனுமதி, ‘S- Pass’ வேலை அனுமதி ஆகியவற்றைப் பெற்றிருப்போர், வேலைக்குச் சரியான திறனாளர்களே என்பதைச் சிங்கப்பூரர்களுக்கு உறுதி செய்ய வேண்டும். அத்தகைய அனுமதி அட்டைகளுக்கான சம்பள வரம்பு, தொடர்ந்து அதிகரிக்கப்படும்.

நியாயமான முறையில் நடக்கத் தவறும் நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். சர்ச்சைகளுக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்படும். இதன் மூலம் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும்.

சேவை தொழில் துறையின் வருமானம் இரண்டாவது காலாண்டில் இரட்டிப்பு வளர்ச்சி!

குடியுரிமை, வயது, இனம், சமயம்,உடற்குறை ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கவும் அது உதவும். சிங்கப்பூர், வெளிநாட்டினரை வெறுக்கத் தொடங்குவதைப் போன்றத் தோற்றத்தை உருவாக்கிவிடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் முதலீடு, வேலை, வாய்ப்புகள் ஆகியவற்றை இழக்கும் அபாயமும் உள்ளது.

வேலை நலன் துணை வருமானத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் தொகையை அரசாங்கம் அதிகரிக்கும். ஆண்டுக்கு 850 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உள்ள அது, 1.1 பில்லியன் சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்படும். வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், உள்நாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் தகுதி நிலைச் சம்பளமாக 1,400 சிங்கப்பூர் டாலர் வழங்க வேண்டும். படிப்படியாக உயரும் சம்பள முத்திரை அறிமுகம் செய்யப்படும்” உள்ளிட்ட அறிவிப்புகளை பிரதமர் லீ சியன் லூங் வெளியிட்டார்.