நாளை நடைபெற உள்ள தேசியப் பேரணி உரை – சிங்கப்பூரர்கள் மனரீதியாக ஆயத்தமாக இருக்குமாறு எச்சரிக்கை

NTUC May Day Rally pm lee speech
pm lee nd speech at ite college
பிரதமர் லீ சியென் லூங் நாளை (ஆகஸ்ட் 21) தேசிய தினப் பேரணி உரையாற்ற இருக்கிறார்.சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகப் பரவிய கோவிட்-19 தொற்று பற்றிய அனுபவம் குறித்து பிரதமர் பேசுவார்.
மேலும் சிங்கப்பூரின் எதிர்காலத்தை எப்படி பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பது பற்றியும் அவர் விளக்கமளிக்கவுள்ளார்.பேரணி உரை நிகழ்ச்சி அங் மோ கியோவில் உள்ள ITE மத்திய கல்லூரியில் நடைபெற உள்ளது.
பேரணி உரைக்குத் தாம் தயாராகிவிட்டதை நேற்று அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட முன்குறிப்பில் அவர் விளக்கினார்.ஈராண்டுகளாக அச்சுறுத்தி வந்த கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு இப்போதுதான் முழுமூச்சில் பேரணி உரையாற்றப்போவதாக அவர் தெரிவித்தார்.
2020-இல் பேரணி உரை ரத்தானதைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு மீடியாகார்ப் நிறுவனத்தின் ஒளிப்பதிவுக் கூடத்தில் தனது பேரணி உரையை ஆற்றினார்.

அவரது உரையில் பொருளாதார சவால்கள் பற்றியும் புவிசார் அரசியல் சவால்கள் பற்றியும் உரையாற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஆண்டுகளில் சிங்கப்பூர் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் அமைதி சீர்குலைந்து போகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதைச் சமாளிக்கும் வகையில் சிங்கப்பூரர்கள் மனரீதியாக ஆயத்தமாக வேண்டும் என்று அந்தச் செய்தியில் பிரதமர் லீ குறிப்பிட்டு இருந்தார்.