இனி சிங்கப்பூரின் பிரதமர் இவரா – பிரதமர் லீ-க்கு என்ன ஆனது !

PM Lee on leave lawrence take charge as pm

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை உள்ளூர் விடுமுறையில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. ஜூன் 12 ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் துணைப் பிரதமரும் (DPM) நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தற்காலிகப் பிரதமராக இருப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது.
PM லீ தனது பேஸ்புக் அப்டேட்டில் தான் பணியிலிருந்து விடுப்பு எடுப்பதை அறிவித்தார்.

இந்த நேரத்தை அவர் தனது வாசிப்பைப் மேம்படுத்தவும், வெளியில் வாக்கிங் செல்லவும் திட்டமிட்டுறுப்பதாக பகிர்ந்து கொண்டார்.வோங் சமீபத்தில் ஜூன் 6 அன்று DPM ஆக பதவி உயர்வு பெற்றார்.

மேலும் அடுத்த பொதுத் தேர்தலில் தற்போதைய மக்கள் செயல் கட்சி (PAP) வெற்றி பெற்றால், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக வோங் பதவியேற்பார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.