சிங்கப்பூர் பிரதமர் லீ விடுப்பு: தற்காலிகப் பிரதமர் ?

(Photo courtesy: pmo.gov.sg)

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியென் லூங் இன்று (டிச.19) முதல் இந்த மாதம் இறுதி (டிச.31) வரை விடுப்பில் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவர் விடுப்பில் இருக்கும் அந்த கால கட்டத்தில், மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹீயன் தற்காலிகப் பிரதமராக செயல்படுவார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் பதிவில், திரு லீ கூறியதாவது: தாம் ஆண்டு இறுதி வரை விடுமுறையில் இருப்பேன் என்றும், அந்த கால கட்டத்தில் சுவாரசிய தகவல்களை ஏதேனும் கண்டால் மக்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறினார்.

இதற்கிடையில், பண்டிகைக் காலத்தை பாதுகாப்பாக கொண்டாடவும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

அந்த பதிவின் புகைப்படத்தில் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள கிராண்ட்-ப்ளேஸின் புகைப்படம் இருந்தது.