இந்த முறை கோழி அடுத்த முறை என்ன? – மறைமுகமாக மலேசியாவின் நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர் லீ

MOTHERSHIP PM LEE

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஜப்பானின் டோக்கியோவிற்கு தனது சுற்றுப் பயணத்தின் கடைசி நாளின் போது ” ஏற்றுமதி தடைகளை அறிவிக்கும் நாடுகள் கவலைக்குரியவை என்பதை கண்டறிந்தாலும் அத்தகைய வளர்ச்சி சும்மா வியப்படைவதற்கில்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“மற்ற நாடுகளிடமிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் நுகர்வோர் நாடாக நாங்கள் மிகவும் பாதிப்படைந்து உள்ளோம் ” என்று டோக்கியோவில் தனது கடைசி நாள் பயணத்தின்போது சிங்கப்பூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.மேலும் இவ்வாறு தெரிவித்த பிரதமர் தனது பதிவில் எந்த நாட்டையும் குறிப்பிட்டு கூறவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன

உலகளாவிய வர்த்தக விதிகளை மீறி செயல்படும்போது உலக வர்த்தக அமைப்பில் (WTO) சிங்கப்பூர் மாற்று வழியை தேடுமா என்று பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.இந்த நடவடிக்கையில் மிக நீண்டதாக இருக்கும் என்று தெரிவித்த பிரதமர் லீ சிங்கப்பூருக்கான உணவு விநியோகத்தை தடையின்றி பாதுகாப்பது உடனடி அவசரம் என்றும் ஊடகத்திடம் தெரிவித்தார்.

நாடுகளின் திடீர் ஏற்றுமதி தடைகளின் விளைவுகளை சமாளிக்க முன்கூட்டியே சிந்திக்கவும், ,எதிர்காலத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கு தயாராக இருக்கவும் பிரதமர் லீ வலியுறுத்தினார். ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கோழி ஏற்றுமதிகளை தடை செய்ய உள்ளதாக அண்டை நாடான மலேசியா சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசியாவின் இந்த அறிவிப்பினால் சிங்கப்பூரின் சிக்கன் விற்பனையகங்கள் மோசமாக பாதிப்படைந்தன. இதனைத் தொடர்ந்து “இந்த முறை கோழி அடுத்த முறை வேறு ஏதாவது அறிவிக்கலாம் ,அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.