ஒரு நாட்டிற்கு இரண்டு துணைப்பிரதமர்களா ? – சிங்கப்பூரின் பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் நிதி அமைச்சர் லாரன்ஸ்

pm lee and lawrence wong

சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் எதிர்வரும் 13ஆம் தேதி துணைப் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சராக நாட்டின் வரவு செலவு திட்டத்தை சீராக தாக்கல் செய்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

பிரதமர் லீ சியென் லூங்கிற்கு அடுத்தபடியாக அமைச்சர் லாரன்ஸ் துணைப் பிரதமராக பதவி ஏற்பதை இந்த நியமனம் உறுதி செய்கிறது.பிரதமர் லீ தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களால் நாட்டில் இல்லாத சமயத்தில் இடைக்காலப் பிரதமராக லாரன்ஸ் செயல்படுவார்.

அமைச்சர் லாரன்ஸ் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை குழுவிற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அமைச்சரவையில் உயர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

துணை பிரதமராக பதவி ஏற்றாலும், தொடர்ந்து லாரன்ஸ் நிதி அமைச்சராகவும் பதவி வகிப்பார்.இதற்குமுன் துணைப் பிரதமரான சுவி கியட் கவனித்து வந்த பிரதமர் அலுவலகத்தில் உள்ள உத்தி பூர்வ குழுவுக்கும் லாரன்ஸ் பொறுப்பேற்பார்.

நான்காம் தலைமுறை குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து ஹெங் விலகியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று அமைச்சரவை மாற்றத்தை அறிவித்தபோது பிரதமர் லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அமைச்சரவையில் இரண்டு துணைப் பிரதமர்கள் இருப்பது 1980களில் இருந்து வழக்கமாக இருந்து வருகிறது.“ என்னுடைய பலத்தை சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் இருக்கும் அர்ப்பணித்து என்னால் இயன்ற தலைசிறந்த சேவையை செய்வேன் ” என்று துணை பிரதமராக பதவி ஏற்க இருக்கும் லாரன்ஸ் கூறினார்