அரசியல் மோசமானால் ஆட்சியும் மோசமாகும்! – அமெரிக்காவைச் சுட்டிக்காட்டிய பிரதமர் லீ

NTUC May Day Rally pm lee speech
pm lee nd speech at ite college

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று நடைபெற்ற மக்கள் செயல் மாநாட்டில் பங்கேற்றார்.மாநாட்டில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.அப்போது,சிங்கப்பூர் அரசியல் தவறாகப் போனால் அரசாங்கமும் தவறாகப் போய்விடும் என்று கூறியுள்ளார்.

பெருமளவில் திரண்டிருந்த கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நாட்டில் அரசியல் மோசமடைந்தால் ஆட்சியையும் மோசமாகும் வாழ்க்கை மோசமாகும்,இது போன்று மற்ற நாடுகளிலும் நிகழ்ந்திருக்கிறது என்று கூறினார்.மற்ற நாடுகளில் அரசியல் என்பது வீண்வாக்குவாதங்கள் கொண்டதாக மாறும்போது ஆட்சி திசைமாறி ,சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது என்றார்.

அமைதியின்மை மற்றும் பிளவுகள் உடைய அரசியலைக் கொண்ட நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக பிரிட்டனையும் அமெரிக்காவையும் கூறினார்.எனவே,மக்கள் செயல் கட்சி அதன் கடமையை உதாசீனப் படுத்தாமல்,தொடர்ந்து அதன் தலைமைத்துவத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

அரசியலில் மோசமான சூழல் சிங்கப்பூரில் ஏற்படாது என்று சிலர் எண்ணுகின்றனர்.60 ஆண்டு கால நல்லாட்சியைப் போலவே தொடர்ந்து நடக்கும் என்று நம்புகின்றனர்.ஆனால்,இதெல்லாம் இயற்கையாக நடைபெறுவது கிடையாது.

நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு ல தலைமுறைகள் ரத்தமும், வியர்வையும், கண்ணீரையும் சிந்தி இன்றைய நிலைக்கு வந்திருப்பதைப் பிரதமர் லீ சுட்டினார்.