புதுப்பொலிவுடன் சிங்கப்பூர்! – ஒன்றரை லட்சம் புதிய தனியார் வீடுகளும் வீவக வீடுகளும் பற்றி விளக்கிய பிரதமர் லீ

pm lee speech private house city
பிரதமர் லீ அவரது டெக் கீ தொகுதியில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்ட இரவு விருந்தில் பங்கேற்றார்.விழாவில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் ‘சிங்கப்பூரை உருமாற்றுவதற்கான திட்டங்கள் புதிய நகரங்களை மட்டுமல்லாது பழமையான பேட்டைகளையும் உள்ளடக்கும் என்று கூறினார்.

முதிர்ச்சியடைந்த பழமையான பேட்டைகள் உருமாற்றத் திட்டத்தில் விட்டுவிடப் படாது என்பதற்கு சான்றாக டெக் கீ வட்டாரம் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

ஜூரோங் லேக் தொகுதி,தி கிரேட்டர் சௌதர்ன் வாட்டர் பிரன்ட்,பாய லேபார் போன்ற புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இம்மாதம் 22-ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரையை ஆற்றிய போது பிரதமர் தெரிவித்திருந்தார்.மேலும்,ஒவ்வொரு புதிய நகரமும் பசுமையானதாகவும் மக்கள் வாழத் தகுந்ததாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2030-ஆம் ஆண்டுகளில் பாய லேபார் ஆகாயப் படைத்தளம் இடமாற்றம் செய்யப்படும்போது அந்தப் பகுதியில் ஒன்றரை லட்சம் புதிய தனியார் வீடுகளும் வீவக வீடுகளும் கட்ட முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.