பிரதமர் லீக்கு கோவிட்-19 தொற்று உறுதி – இதுவே முதல்முறை

pm-lee-tests-positive Covid
Photo Credit; PM Lee's Facebook page

PM Lee tests positive for Covid-19: பிரதமர் லீ சியென் லூங்கிற்கு இன்று (மே 22) காலை கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அவர் தனது சமூக ஊடகத்தில் வழியே இந்த செய்தியை வெளியிட்டார், அதனுடன் பாசிட்டிவ் ரிசல்ட் அடங்கிய ART கருவியின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Seletar Expressway சாலை விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனில்லாமல் மரணம்

முதல் முறையாக அவருக்கு கோவிட்-19க்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் திரு லீ அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் நன்றாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் லீக்கு 71 வயதாகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் கோவிட்-19 பூஸ்டர் போட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயானது சிங்கப்பூரில் வழக்கமாக தொடர்ந்து இருக்கும் என்ற சூழலில், நாம் தொடர்ந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ நினைவுபடுத்தினார்.

கார் மோதி கருஞ்சிறுத்தை மரணம் – வீடியோ பார்த்து நெட்டிசன்கள் கவலை