“முஸ்லீம் சமுதாய மக்களுக்கு நன்றி” தெரிவித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ!

PM Lee thanks muslims
Photo: Ministry of Communications and Information

சிங்கப்பூரில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மத தலைவர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் லீ சியன் லூங் நன்றி தெரிவித்தார்.

பள்ளிவாசல் தலைவர்கள், தன்னார்வத் தொண்டர்கள், ரமலான் சேவைத் தூதர்கள் மற்றும் பல்வேறு மதச் சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட நோன்பு திறக்கும் நிகழ்வில் திரு லீ கலந்து கொண்டு பேசினார்.

மகளின் அறையில் ரகசிய கேமரா வைத்து ரசித்த கொடூர தந்தை: சிறை மற்றும் பிரம்படி விதிப்பு

அப்போது, சிங்கப்பூர் இந்த ஒற்றுமையை கடினமாகச் சம்பாதித்ததாக கூறிய அவர், இது மிகவும் விலைமதிப்பற்றது என்றும் விவரித்தார்.

மேலும், சமய தலைவர்கள் ஒன்று கூடி, தங்கள் சொந்த நம்பிக்கைக்கு அப்பால் ஒற்றுமையாக பங்களிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

முஸ்லிம் மக்கள் தொற்றுநோய் காலகட்டத்தில் செய்த தியாகங்கள், மேலும் புரிந்துணர்வு, இணக்கம் ஆகியவற்றுக்கு திரு லீ நன்றி கூறினார்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சிமிக்க ரமலான் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

குழந்தை சக்கர வண்டியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர்: கண்டித்து விடுப்பில் அனுப்பிய நிர்வாகம்!