சிங்கப்பூரில் மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 216 பேர் மீது விசாரணை!

(Photo: Ernest Chua)

மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 216 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் 16 முதல் 73 வயதுக்குட்பட்ட, 145 ஆண்கள் மற்றும் 71 பெண்கள் ஆகிய சந்தேக நபர்கள் அடங்குவர்.

COVID-19: வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்த ஆடவர் மரணம்

சுமார் 467 மோசடிகளில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் S$3.48 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்ததாகக் காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளில் முக்கியமாக இணைய காதல் மோசடிகள், மின் வணிக மோசடிகள், பாலியல் கடன் மோசடிகள், சீன அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் மோசடிகள், போலி சூதாட்ட மோசடிகள் மற்றும் கடன் மோசடிகள் ஆகியவை அடங்கும்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்கியது குறித்தும் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 26 வரை நடத்தப்பட்ட இரண்டு வார சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த இந்திய ஊழியர்… நிதி திரட்டும் முயற்சி