தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை – 303 பேரிடம் போலீசார் விசாரணை

மோட்டார் சைக்கிளை திருடி
File Photo : Singapore Police arrested

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 303 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சந்தேக நபர்கள் சுமார் 1,020 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் நம்பப்படுகிறது.

சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பிய வெளிநாட்டு பாலியல் தொழிலாளி – “PASS”காக அதிகாரிக்கு கட்டணமின்றி பாலியல் சேவை

மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் S$8.4 மில்லியனுக்கும் அதிகமாக தொகையை இழந்ததாகவும் கூறப்படும், இதனை இன்று சனிக்கிழமை (டிசம்பர் 18) போலீசார் தெரிவித்தனர்.

மோசடி வழக்குகளில் இணைய காதல், இ-காமர்ஸ், ஆள்மாறாட்டம், முதலீடு, வேலை மற்றும் கடன் வகை மோசடிகள் ஆகியவை அடங்கும்.

விசாரணையில் உள்ள சந்தேக நபர்களில் 15 மற்றும் 71 வயதுக்குட்பட்ட 211 ஆண்களும் 92 பெண்களும் அடங்குவர்.

கடந்த டிசம்பர் 3 முதல் 17 வரை இரண்டு வார சோதனை நடவடிக்கையை வர்த்தக விவகார துறை மற்றும் ஏழு போலீஸ் தரை பிரிவுகளின் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

மோசடி செய்தல், பணமோசடி செய்தல் அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக சந்தேகநபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து திண்டுக்கல் வந்த ஊழியருக்கு ஒமைக்ரான் ?