சிங்கப்பூரில் 344 சந்தேக நபர்களிடம் விசாரணை – மோசடி குறித்து ஆன்லைனிலும் புகார் செய்யலாம்

Police investigating Scam

சிங்கப்பூரில் சுமார் 607 முறைகேடான மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 344 பேரை சிங்கப்பூர் காவல் படை (SPF) விசாரித்து வருகிறது.

அதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் S$9.84 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்ததாகக் கூறப்படுகிறது, இதனை நேற்று (ஜனவரி 30) செய்தி வெளியீட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்-இந்தியா இடையே பயணிகள் விமான சேவை – பேச்சுவார்த்தை…

விசாரணையில் உள்ள சந்தேக நபர்கள் 16 முதல் 77 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அதில் 229 ஆண்கள் மற்றும் 115 பெண்கள் உள்ளனர் என்றும் அது கூறியுள்ளது.

சந்தேக நபர்கள் 607 மோசடிகளில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.

இதில் முக்கியமாக இணைய காதல் மோசடிகள், மின்னணு வணிக மோசடிகள், சீன அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடிகள், போலி சூதாட்ட மோசடிகள் மற்றும் கடன் மோசடிகள் ஆகியவை அடங்கும் என்றும் SPF தெரிவித்துள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி முதல் 2 வாரங்கள் தீவு முழுவதும் நடைபெற்ற அமலாக்க நடவடிக்கையில், வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் மற்றும் 7 காவல் தரைப் பிரிவுகளின் அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

தகவல் அளிக்க..

இதுபோன்ற மோசடிகள் குறித்த தகவல் அளிக்க – 1800-255-0000 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் பேருந்தில் செல்ல ஆசையா? அதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா ?