காணாமல் போன 13 வயது சிறுமியின் இருப்பிடம் குறித்து தகவல் தருமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள் – உதவுங்கள் மைக்செட் வாசகர்களே !

Nayli Humairah Rozali (Missing Girl)

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 12 முதல் காணாமல் போன 13 வயது சிறுமியின் இருப்பிடம் குறித்து தகவல் தருமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Nayli Humairah Rozali எனும் பெயர் கொண்ட அச்சிறுமி, கடைசியாக Block 199 Toa Payoh Northக்கு அருகில் காணப்பட்டார் என்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியீட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீசாரின் ஹாட்லைனை அழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையென்றால் ஆன்லைனிலும் தகவலைச் சமர்ப்பிக்கலாம் என்றும் காவல்துறை கூறியுள்ளது. மேலும் அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.