போலீசை கண்டு ஓட்டம் – டேசர் துப்பாக்கியுடன் வளைத்து பிடித்த போலீசார்: சிங்கப்பூரில் வைரலாகும் வீடியோ

police-taser-subdue-man-bencoolen

பென்கூலன் ஸ்ட்ரீட்டில் ஆடவர் ஒருவரை கைது செய்யும் வீடியோ வைரலாக பரவியது, போலீசார் டேசர் துப்பாக்கியை எடுப்பதையும் அதில் காண முடிகிறது.

இந்த கைது நடவடிக்கை பென்கூலன் ஷாப்பிங் மாலுக்கு முன்னால் நடந்தது என்பதை வீடியோ மூலம் அறிய முடிகிறது.

பிழைக்க வந்த இடத்தில் வீண் வேலை – இந்தியருக்கு சிறை தண்டனை

அந்த நபரை உட்காரும்படி போலீஸ் அதிகாரி ஒருவர் சத்தமிடுவதையும் கேட்க முடிகிறது, அதோடு அவர் கீழே அமர்ந்து விடுகிறார்.

21 வயதுடைய அந்த ஆடவர், செங் யான் ப்ளேஸில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

அப்போது அவரை நிற்குமாறு அதிகாரிகள் கூறியும் அறிவுறுத்தல்களை ஏற்க மறுத்து, அங்கிருந்து அவர் ஓடினார்.

துரத்தி பிடித்தபோது அவர் சுமார் 50 செமீ அளவுள்ள உள்ளிழுக்கும் தடியை எடுத்ததாகவும், பின்னர் அதிகாரி தனது டேசரை எடுத்து வெளியே நீட்டியவுடன் தடியை கீழே போட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

“வேலை செய்வது எளிதானது அல்ல, அதன் கஷ்டம் எனக்கு புரியும்” – உணவக ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்கிய உணவு விநியோக ஓட்டுநர்!