பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ‘Lisha’- பங்கேற்குமாறு அழைப்பு!

Photo: Lisha Official Facebook Page

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, இங்குள்ள பல்வேறு தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழர்கள் இணைந்து பாரம்பரிய நடனத்துடனும், சிலம்பம், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளுடனும் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மது போதையில் பேருந்து ஓட்டுநர், போலீசிடம் ரகளை – இந்தியருக்கு சிறை

அந்த வகையில், லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கம் (Little India Shopkeepers and Heritage Association) இணைந்து ‘Lisha’ என்ற அமைப்பைத் தொடங்கி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு போட்டிகளும் நடத்தி கவர்ச்சிகரமான பரிசுகளையும் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பல்வேறு போட்டிகளுக்கு ‘Lisha’ ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், ஆர்ட் மற்றும் ஓவியம் போட்டிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘Pongal Art Gallery 2022’ என்ற ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.eventbrite.com/…/pongal-art-gallery-tickets என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம். பதிவு கட்டணம் ஏதுமில்லை. வரும் ஜனவரி 15, 16- ல் காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை போட்டி நடைபெறும்.

புத்தாண்டு அன்று ஸ்ரீவைராவிமட காளியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

பொங்கல் பானையை அலங்கரித்தல் (Pongal Pot Painting 2022) போட்டி, வரும் ஜனவரி 8, 9 ஆகிய இரு நாட்களிலும் மூன்று வேளைகளில் போட்டி நடத்தப்படும். காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 02.00 மணி முதல் 03.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் 07.30 மணி வரையும் போட்டி நடக்கவுள்ளது. இப்போட்டியில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் பங்கேற்க முடியும். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.eventbrite.sg/e/pongal-pot-painting-2022-tickets என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணமாக 20 சிங்கப்பூர் டாலரை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.