“ஜனவரி 6- ஆம் தேதி தொடங்குகிறது பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள்”- லிஷா அறிவிப்பு! 

Image : LISHA

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது லிஷா (Lisha). இதில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்களும் கலந்துக் கொண்டு மகிழ்வர். அந்த வகையில், நடப்பாண்டில் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களுக்கான அறிவிப்பை லிஷா வெளியிட்டுள்ளது.

புகை மண்டலமாகக் காட்சியளித்த குடியிருப்பு! – மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவர்!

அதன்படி, வரும் ஜனவரி 6- ஆம் தேதி தொடங்கும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள், ஜனவரி 21- ஆம் தேதி அன்று நிறைவடையும். ஜனவரி 7- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு போலி@கிளைவ் தெருவில் (Poli@Clive Street) நடைபெறும் நிகழ்ச்சியில் பொங்கல் திருநாளுக்கான ஒளியூட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. அதேபோல், இதே தெருவில் ஜனவரி 7- ஆம் தேதி முதல் ஜனவரி 16- ஆம் தேதி வரை மாடுகள் காட்சிப்படுத்தப்படும். இதனை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

Photo: Lisha Official Facebook Page

பொங்கல் பட்டிமன்றம், பொங்கல் பாட்டு மன்றம், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றனர். பொங்கல் திருநாள் குறித்த சிறப்புகளை மாணவ, மாணவியர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என அனைவரும் காணும் வகையில் சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தை! – சிறுமித் தூங்கும்போது அந்தரங்கப் பகுதிகளைத் தொடுவதாக புகார்!

இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.pongalsg.com/Events என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.