AYE சாலையில் தீப்பிடித்து எரிந்த Porsche கார் (வீடியோ): தீயை அணைக்க போராடிய SCDF

Porsche-fire
SG Road Vigilante/FB

ஆயர் ராஜா அதிவிரைவுச் சாலையில் (AYE) நேற்று (ஜன. 10) மாலை கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியானது.

அந்த வீடியோவில், Porsche கார் அதிவிரைவுச் சாலையின் இடதுபுறப் பாதையில் தீப்பிடித்து எரிவதைக் காணலாம்.

சிங்கப்பூரில் S$8.6 மில்லியன் ஜாக்பாட் பரிசு: Singapore Pools லாட்டரி கடைகளில் நீண்ட வரிசை!

மேலும், அந்த காருக்கு அருகில் குறைந்தது ஐந்து தீயணைப்பு வீரர்களையும் காணலாம். அதில் மூவர் தீயை அணைக்க போராடுவதையும் காணமுடிகிறது.

ஜன. 10 அன்று இரவு சுமார் 7:40 மணியளவில் கெப்பல் சாலையிலிருந்து வெளியேறிய பிறகு துவாஸ் நோக்கி செல்லும் AYE சாலையில் கார் தீப்பற்றி எரிவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும், தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பான விசாரணை நடைபெறுவதாக SCDF கூறியது.

இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!