தைவானில் உயிரிழந்த சிங்கப்பூர் பெண்! – குடிபோதையில் ஓட்டுனர்;பெண்மீது குற்றச்சாட்டு!

porsche taiwan accident
தைவானில் சிங்கப்பூர் பெண் வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.நவம்பர் 1ஆம் தேதி தைவானில் சாலையைக் கடக்க முயன்ற போது ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.உயிரிழந்த பெண் யுனைடெட் ஏர்லைன்ஸ் (யுஏ)-இல் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிவது தெரிய வந்துள்ளது.
30 வயதுக்கு மேற்பட்ட அந்தப் பெண் விடுமுறை காரணமாக தைவான் வந்திருக்கிறார்.விபத்தை ஏற்படுத்திய (Porsche) வாகன ஓட்டுனர் முதலில் தான் மது அருந்தியதை ஒப்புக்கொள்ளவில்லை.பின்னர்,காவல்துறை விசாரணையின் போது அவர் சில கோப்பைகள் சிவப்பு ஒயின் உட்கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
சட்டவரம்பைத் தாண்டி அதிக அளவு மது அருந்தியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.தான் விரைவாக வாகனம் ஓட்டவில்லை என்றும் இரவு பெய்த மழை மற்றும் இருட்டான சூழலே காரணம் என்றும் கூறினார்.மேலும்,அந்தப் பெண் திடீரென காரின் குறுக்கே ஓடியதாகவும் ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

ஓட்டுனர் மீது ஏற்கனவே இரண்டு முறை மது அருந்தி வாகனம் ஒட்டிய குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.பொதுமக்கள் பாதுகாப்புக்கு எதிரான செயல்கள் மற்றும் அலட்சியமான கொலைகளுக்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்து ஏற்ப்பட்டு சில நொடிகளிலேயே பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.விபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இறுதியாக காவல்துறையின் கூற்றுப்படி,அந்தப் பெண் கடக்க முயன்ற தெருவில் “பாதசாரிகள் கடக்க வேண்டாம்” என்ற பலகை இருந்ததாகக் கூறப்படுகிறது.