உரிமம் இல்லாமல் 47 காற்றழுத்த துப்பாக்கி வைத்திருந்த ஆடவர் கைது

உரிமம் இல்லாமல் காற்றழுத்த துப்பாக்கியை இறக்குமதி செய்ததாகவும், அவற்றை வைத்திருந்ததற்காகவும் 38 வயதான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்மையான துப்பாக்கிகளை போல காணப்படும் அவை, கனமான பந்துகளை அழுத்தத்தின் மூலம் வெளியே தள்ளும் திறன் படைத்தது.

கொரோனா: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவர், சமூகத்தில் 4 பேர் உட்பட 24 பேர் பாதிப்பு

சட்டத்தின்படி, இதுபோன்ற காயங்களை ஏற்படுத்தும் துப்பாக்கிகளை இறக்குமதி செய்யவும் அதனை வைத்திருக்கவும் முறையான உரிமம் பெற வேண்டும்.

இது பற்றி காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த ஆடவரை கண்டறிந்து அவரிடமிருந்து 47 காற்றழுத்த துப்பாக்கிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுபோன்ற துப்பாக்கிகளை முறையான அனுமதியில்லாமல் இறக்குமதி செய்யவோ வைத்திருக்கக் கூடாது என்றும் காவல்துறை எச்சரித்தனர்.

இதுபோன்ற துப்பாக்கிகளை வைத்திருப்போருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$5000 அபராதமும் மூன்றாண்டு சிறை தண்டனையோ விதிக்கப்படலாம்.

இனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம்!