ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

 

சிங்கப்பூரில் உள்ள 24 கெலாங் ஈஸ்ட் அவென்யூ- 2ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயிலில் வரும் மே 17- ஆம் தேதி அன்று மாலை பிரதோஷ பூஜை (Prathosham Prayers) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) அறிவித்துள்ளது.

பாசிர் ரிஸ் பிளாட்டில் தீ: 40 பேர் வெளியேற்றம்

பிரதோஷ பூஜையைப் பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பார்க்கலாம். அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் https://sst.org.sg/ என்ற இணையப் பக்கத்திற்கு சென்று, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பதிவுச் செய்துக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் அனைத்து Singapore Pools கிளைகளும் மூடல் – ஏன் தெரியுமா?

உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்திவிடுவார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயிலின் அலுவலக தொலைபேசி எண்ணுக்கு தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.