ஜூன் 1- ல் ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

 

 

சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயிலில் வரும் ஜூன் 1- ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்கு பிரதோஷ பூஜை (Prathosham Prayers) நடைபெறும் என இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

தரவுகள், போட்டோக்கள் நீக்கப்படலாம் – Google கணக்கு உடையோருக்கு எச்சரிக்கை

இந்த நாளில் அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவுச் செய்துக் கொள்ளலாம். பின்னர், உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்தி விடுவார்கள். இந்நாளில் பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பூஜையைப் பார்க்க முடியும்.

லிட்டில் இந்தியாவில் 7 பேர் கைது… S$1 மில்லியன் பறிமுதல் – வீராசாமி சாலை, அப்பர் டிக்சன் சாலையில் அதிரடி

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.