ஜனவரி 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Sri Sivan Temple

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, ஸ்ரீ சிவன் கோயிலில்(Sri Sivan Temple) கீழ் வரும் மாற்றங்கள் வரும் ஜனவரி 15- ஆம் தேதி சனிக்கிழமை பிரதோஷம் நாளன்று பொருந்தும்.

பிளீஸ்..! இனி நம்ம ஆட்கள் மேல் எப்படி மதிப்பு வரும்..? சிங்கப்பூரை திணறடிக்கும் லிட்டில் இந்தியா!

மாலை 04.20 PM மணி முதல் மாலை 05.45 PM மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கு பக்தர்கள் http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்தி விடுவார்கள்.

பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் நிற்காமல், தொடர்ந்து நடந்தவாறு வழிபாட்டில் ஈடுபடுமாறு கோயில் நிர்வாகம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

“உடும்பு vs கடும் விஷமுள்ள நாகப்பாம்பு” – சிங்கப்பூர் வைரல்..!

மாலை 04.30 PM மணி முதல், பிரதோஷம் பூஜையின் நேரலையில் https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம். இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயிலின் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.