போலீசை கண்டு ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சி – நிறைமாத கர்ப்பிணியை மடக்கி பிடித்த போலீஸ் !

pregnant drug abuser

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (CNB) அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க 7 மாத கர்ப்பிணிப் பெண் 11வது மாடியில் உள்ள ஜன்னலுக்கு வெளியே சென்று தப்பிக்க முயற்சித்துள்ளார்.

அதிகாரிகள் அந்த பெண் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டி தங்களை அடையாளம் காட்டியுள்ளனர். போதைப்பொருள் பாவனையாளர் என சந்தேகிக்கப்பட்ட அந்த பெண்,  அவர்களிடம் இருந்து தப்பிக்க நிறைமாத கர்ப்ப நிலையிலும் பயமின்றி 11வது மாடியில் உள்ள தனது யூனிட்டின் ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளார்.

CNB அதிகாரிகள் அந்த பெண் 8வது மாடிக்கு இறங்குவதைக் கண்டனர். ஒரு அதிகாரி உடனடியாக படிக்கட்டுக்கு விரைந்தார். மேலும் பயத்தில் அவள் தன்னைத்தானே எதாவது செய்துகொள்ள கூடாது என்பதற்காக அந்த அதிகாரி அவளை அமைதிப்படுத்தினார். பின்னர் SCDF அதிகாரிகளால் அந்தப் பெண் காயமின்றி மீட்கப்பட்டார்.

பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, CNB அதிகாரிகள் அந்த பெண்ணின் ஏழு வயது மகன் வீட்டில் தனியாக இருப்பதைக் கண்டனர். மேலும், அங்கு போதைப்பொருட்களையும் கண்டுபிடித்தனர். அந்த பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீட்கப்பட்ட அந்த பெண்ணின் எழு வயது சிறுவனின் நலனுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நெருங்கிய உறவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் CNB தெரிவித்துள்ளது.