உலகில் செல்வாக்கு மிக்க முஸ்லிம்களின் பட்டியலில் சிங்கப்பூர் பெண்மணி..!

Singapore President Halimah Yacob tests positive for COVID-19

உலகில் செல்வாக்கு மிக்க முஸ்லிம்களின் பட்டியலில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்கள் இடம்பிடித்துள்ளார்.

உலகில் செல்வாக்கு மிக்க முஸ்லிம்களின் 500 பேர் கொண்ட பட்டியலில், முதல் 50 பெயர்களில் சிங்கப்பூர் அதிபர் ஹலீமா யாக்கோப் அவர்கள் இடம் பிடித்துள்ளதாக ஜோர்தானில் உள்ள ராயல் இஸ்லாமிய உத்திகள் ஆய்வுக் கழகம் என்ற சிந்தனை சிற்பிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

50 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் 38 வது இடத்தில் ஹலீமா உள்ளார். இத்தகைய பெருமை பெற்றுள்ள ஒரே சிங்கப்பூர் பெண்மணி இவர்தான். தென்கிழக்கு ஆசியாவிலிருந்து அந்த 50 பேர் பட்டியலில் 5 பேர் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.