சிங்கப்பூர் அதிபர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்த ஐ.நா. பொதுச் சபையின் தலைவர்!

Photo: Singapore President Official Facebook Page

சிங்கப்பூர் அரசின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76- வது அமர்வின் தலைவர் அப்துல்லா ஷாஹித் விமானம் மூலம் நேற்று (06/02/2022) சிங்கப்பூர் வந்தார். அவருடன் ஒரு மூத்த ஆலோசகர் (Senior Advisor) மற்றும் ஒரு ஆலோசகர் (Advisor), நிர்வாக உதவியாளர் (Executive Assistant) ஆகியோரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

உட்லண்ட்ஸ் குடியிருப்பில் தீ விபத்து… 50 பேர் வெளியேற்றம்!

அதைத் தொடர்ந்து, இஸ்தானா அதிபர் மாளிகைக்கு சென்ற அவருக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் உலகளாவிய விவகாரங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து பேசியதாக தகவல் கூறுகின்றனர்.

இச்சந்திப்பு குறித்து சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித்தை இஸ்தானாவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. அப்துல்லா ஷாஹித் சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். நாங்கள் ஒரு நல்ல பேச்சுவார்த்தையை மேற்கொண்டோம். ஐ.நா.வுக்கு சிங்கப்பூரின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் சந்திப்பு!

பருவநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்சி போன்ற உலகளாவிய சவால்களை நாம் சமாளிக்க வேண்டுமானால் பன்முகத்தன்மை அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் அதிபரைத் தொடர்ந்து, இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித்தைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அப்துல்லா ஷாஹித் இன்று பிற்பகல் இஸ்தானாவிற்கு அதிகாரப்பூர்வ பயணமாக வருகை தந்தார். இவர் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர், குழந்தைகள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

1992- ஆம் ஆண்டு முதல் சிறிய மாநிலங்களின் மன்றத்தின் (Forum of Small States- ‘FOSS’) தலைவராக ஐ.நா.வின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் சிங்கப்பூர் நமது பங்கை வகிக்கிறது. மிக சமீபத்தில், சைபர் பாதுகாப்பு (Working Group on Cyber security) பற்றிய திறந்த முடிவு பணிக்குழுவுக்கு தலைமை வகிப்பது போன்ற பிற பதவிகளை நாங்கள் ஏற்றுள்ளோம். ஒரு சிறிய மற்றும் திறந்த நாடாக நாம் சார்ந்திருக்கும் விதிகள் அடிப்படையிலான பலதரப்பு அமைப்பின் இன்றியமையாத அங்கமான ஐ.நா.வை ஆதரிப்பதில் சிங்கப்பூர் உறுதிப் பூண்டுள்ளது.

நாம் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களுக்கு பல தரப்பு தீர்வுகளை முன்னெடுப்பதற்கு உதவும் கூடுதல் வாய்ப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.