சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூர் அரசின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76- வது அமர்வின் தலைவர் அப்துல்லா ஷாஹித் விமானம் மூலம் நேற்று (06/02/2022) சிங்கப்பூர் வந்தார். அவருடன் ஒரு மூத்த ஆலோசகர் (Senior Advisor) மற்றும் ஒரு ஆலோசகர் (Advisor), நிர்வாக உதவியாளர் (Executive Assistant) ஆகியோரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

‘இண்டிகோ’ விமானத்தில் திருச்சி வந்த இருவரிடம் 600க்கும் அதிகமான கிராம் தங்கம் பறிமுதல்

அதைத் தொடர்ந்து, இன்று (07/02/2022) காலை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவருக்கு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் காலை விருந்தளித்தார்.

பின்னர், இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவரும், எனது பழைய நண்பருமான அப்துல்லா ஷாஹித்துக்கு காலை உணவை வழங்கியதில் மகிழ்ச்சி.

உட்லண்ட்ஸ் குடியிருப்பில் தீ விபத்து… 50 பேர் வெளியேற்றம்!

சிங்கப்பூர் பன்முகத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விலைமதிப்பற்ற பங்கிற்கு உறுதி பூண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித் (United Nations General Assembly, H.E Abdulla Shahid) மற்றும் நானும் பலதரப்பட்ட பிரச்சினைகளை விவாதித்தோம். இந்த ஆண்டு ஏப்ரலில் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு (United Nations Convention on the Law of the Sea- ‘UNCLOS’) ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 40- வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உயர்மட்ட நினைவு நிகழ்வைக் கூட்டுவதற்கான, அவரது திட்டங்களுக்கு சிங்கப்பூரின் முழு ஆதரவை நான் அவருக்கு உறுதியளித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித்தின் சிங்கப்பூர் பயணத்துக்கு ஆகின்ற செலவுகள் அனைத்தையும் சிங்கப்பூர் அரசு ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.