அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகிறார் வியட்நாம் பிரதமர்!

Photo: Vietnam Prime Minister

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வரும் பிப்ரவரி 8- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வருகிறார் வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்.

15 வயது சிறுமியை 9 நாட்களாக காணவில்லை – ஷேர் செய்து உதவுங்கள் வாசகர்களே

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அழைப்பின் பேரில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் (Pham Minh Chinh, Prime Minister of Vietnam) சிங்கப்பூருக்கு பிப்ரவரி 8- ஆம் தேதி வருகிறார். வியட்நாம் பிரதமர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை வெளிநாட்டு பயணம் இது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டு கால உறவைக் குறிக்கும் வகையில், வியாட்நாம் பிரதமரின் பயணம் அமையவிருக்கிறது. வியட்நாம் பிரதமருடன் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர், தொழில் முதலீடு துறை அமைச்சர் உள்ளிட்டோரும் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.

பிப்ரவரி 9- ஆம் தேதி அன்று இஸ்தானாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை, வியட்நாம் பிரதமர் தனித்தனியே சந்தித்துப் பேசவிருக்கிறார். பின்னர், சிங்கப்பூர் பிரதமர் அளிக்கும் மதிய விருந்தில் வியட்நாம் பிரதமர் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

JCube மால் விரைவில் மூடப்பட உள்ளது – காரணம் என்ன..?

அதைத் தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. பின்பு, இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

வியட்நாம் பிரதமரின் வருகையின் நினைவாக, கலப்பு ஆர்க்கிட் மலருக்கு அவரது பெயரும், அவரது மனைவி பெயரும் சூட்டப்படும்”. இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.